திருச்சி வந்த 9 பேருக்கு கொரோனா பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி வந்த 9 பேருக்கு கொரோனா பரிசோதனை

Added : மே 14, 2020
Share

திருச்சி: வெளிமாநிலங்களில் இருந்து திருச்சி வந்த, ஒன்பது பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் பலரும் கிருஷ்ணகிரி அருகே சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டனர். இவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்களை அரசு பஸ்கள் மூலம் அழைத்து வந்து, அவரவர் மாவட்டங்களில் பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த, 29 தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் அரசு பஸ்சில் அமர வைக்கப்பட்டு நேற்று அழைத்து வரப்பட்டனர். இவர்களில், நாமக்கல்லை சேர்ந்த, ஏழு பேர், பெரம்பலூரை சேர்ந்த, ஒன்பது பேர் அந்தந்த மாவட்டங்களில் இறக்கி விடப்பட்டனர். பின், திருச்சி திருவெறும்பூர், துறையூர், பாலக்கரை பகுதிகளைச் சேர்ந்த, ஒன்பது பேரும் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அரசு மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களில், மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் லாரி டிரைவர்களாக பணிபுரிந்தவர்கள். மீதியுள்ள, ஆறு பேர் மஹாராஷ்டிராவில் விற்பனை பிரதிநிதிகளாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X