பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர வியாபாரிகளிடம் மன்னிப்பு கேட்ட நகராட்சி கமிஷனர்

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: காய்கறி, பழக்கடைகளை அப்புறப்படுத்திய விவகாரத்தில், வியாபாரிகளிடம் வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று முன்தினம் அனுமதியில்லாமல் சாலையோரம் வைத்திருந்த, காய்கறி, பழக்கடைகளை அப்புறப்படுத்தும்படி நகராட்சி அதிகாரிகள் கூறினர். வியாபாரிகள் மறுத்தனர். ஆத்திரமடைந்த நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ், 50, அங்கிருந்த, 10 கடைகளுக்கு சென்று காய்கறி, பழங்களை சாலையில் கொட்டி நாசம் செய்து அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பொது மக்கள், வியாபாரிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனால் தாசில்தார் சிவபிரகாசம், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோருடன், நேற்று சென்ற நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ், பழக்கடை வைத்திருந்த பூங்கொடியை, 30, சந்தித்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அந்த பெண்ணுக்கு சால்வை அணிவித்து மளிகை, அரிசி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கினார். பல முறை எச்சரித்தும், கண்டுகொள்ளாமல் கடைகளை அப்புறப்படுத்தாததால், இந்த செயலை செய்து விட்டேன் என்று, பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடம் கூறி, கமிஷனர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X