பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் போலீஸ் ஏட்டு, மருந்தாளுனர் உள்பட 23 பேருக்கு கொரோனா

Added : மே 14, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், போலீஸ் ஏட்டு, மருந்தாளுனர் உள்பட, 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில், பாதிப்பு எண்ணிக்கை, 128 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த, 2 வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆக இருந்ததில், 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள், மாவட்டத்தினுள் யாருக்கும் தெரியாமல் வந்து தங்கியுள்ளோர் ஆகியோரை கண்டறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை, 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நேற்று ஒரு நாளில், வந்த வாசி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வரும், 40 வயதுள்ள ஒருவர், வந்தவாசி டவுன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரியும், 40 வயதுள்ள ஒருவர் என மேலும், 23 பேருக்கு கொரோனா தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று பரவல், 128 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X