பொது செய்தி

தமிழ்நாடு

கலசப்பாக்கம் அருகே 10 பேருக்கு வயிற்று போக்கு

Added : மே 14, 2020
Share
Advertisement

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே நேற்று, 10 பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதால், மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மாம்பாக்கத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள, 10 பேருக்கு திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும், கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் பிரபு தலைமையில், மருத்துவ குழுவினர் முகாமிட்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வயிற்று போக்குக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X