தமிழ்நாடு

சேலத்தில் 21 நாளாக 'கொரோனா' இல்லை: பச்சை மண்டலமாக மாறும் மாநகராட்சி

Added : மே 14, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியில், 21 நாளாக, 'கொரோனா' தொற்று இல்லாததால், பச்சை மண்டலமாக மாறுகிறது.
தமிழகத்தில், கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில், இதுவரை, 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், துவக்கத்தில் சிவப்பு மண்டலத்திலிருந்து, ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது. இதில், சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை, 33, 34, 44, 46, 50, 58வது வார்டுகளில், 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் உத்தரவுப்படி, அவர்கள் வசித்த இடங்கள், நடமாடிய இடம், சுற்றுப்பகுதி என, 19 வார்டுகளில், 100 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இப்பகுதிகளிலுள்ள, 12 ஆயிரத்து, 75 குடியிருப்புக்கு, 3,118 கிலோ பிளீச்சிங் பவுடர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன. அத்துடன், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும், ஒன்பது லட்சம் லிட்டர் சோடியம் ஹைபோகுளோரைட் கிருமி நாசினி மருந்து, 68 கைத்தெளிப்பான், 15 இயந்திர தெளிப்பான், நான்கு லாரிகள் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. காய்கறி, உழவர் சந்தைகள் விசாலமான இடத்துக்கு மாற்றப்பட்டு, சமூக இடைவெளியில் மக்கள் வாங்கிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த, சனி, ஞாயிறில், இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மக்களின் வீடுகளுக்கே காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், 120 வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கப்பட்டன. மாநகராட்சியில், 3,077 பேருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்கண்ட நடவடிக்கையால், கடந்த ஏப்., 23க்கு பின், 21 நாளாக, புது தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், சேலம் மாநகராட்சி பச்சை மண்டலமாக மாறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X