பொது செய்தி

தமிழ்நாடு

மூடப்பட்ட உழவர் சந்தைகளை திறக்க விவசாயிகள் கோரிக்கை

Added : மே 14, 2020
Share
Advertisement

சேலம்: 'கொரோனா' பரவலை தடுக்க, மூடப்பட்ட உழவர்சந்தைகளை மீண்டும் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வேளாண் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 179 உழவர் சந்தைகள், கடந்த மார்ச், 25 ஊரடங்கு அமலான நிலையிலும் செயல்பட்டு வருகின்றன. அதில், சமூக விலகலை கடைப்பிடிக்க, 100க்கும் மேற்பட்ட சந்தைகள் மாற்று இடங்களில் இயங்குகின்றன. அதேநேரம், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட, சேலம், தாதகாப்பட்டி உள்பட, தமிழகம் முழுதும், 17 உழவர் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், அந்த சந்தைகளில், விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள், தங்களின் காய்கறியை விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம், மூடப்பட்ட உழவர் சந்தைகளை ஒட்டிய பகுதிகளில், மளிகை, தனியார் காய்கறி கடைகள் தற்போது செயல்படத்தொடங்கிவிட்டன. அதனால், மூடப்பட்ட உழவர்சந்தைகளை திறந்து செயல்படுத்த, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X