பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவனுக்கு தொற்று எதிரொலி: ஜலகையில் வீடுதோறும் கண்காணிப்பு பணி தீவிரம்

Added : மே 14, 2020
Share
Advertisement

ஓமலூர்: சிறுவனுக்கு, 'கொரோனா' தொற்று ஏற்பட்டதால், ஜலகண்டாபுரத்தில், வீடுதோறும் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் பணியை, பொதுசுகாதாரத்துறையினர் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம், ஐந்தாவது வார்டைச் சேர்ந்த, ஏழு வயது சிறுவனுக்கு, 'கொரோனா' தொற்று, நேற்று முன்தினம் உறுதியானது. இதனால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிறுவன் வீட்டைச்சுற்றியுள்ள, ஐந்து, ஏழு, எட்டாவது வார்டுகளில் உள்ள, 267 வீடுகள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டன. அப்பகுதிக்குள் யாரும் செல்லாதபடி, பிரதான சாலை, குறுக்கு சாலைகளில், மூங்கிலால் தடுப்புகள் ஏற்படுத்தி, ஜலகண்டாபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நங்கவள்ளி மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வீடுதோறும் சென்று, சளி, காய்ச்சல், இருமல், இதர பிரச்னை உண்டா என, மருத்துவ பரிசோதனையை நேற்று தொடங்கினர். அதேநேரம், ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், ஜலகண்டாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜவிஜயகணேஷ் தலைமையில், 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 'ஸ்பிரேயர்' மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X