சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை வியாபாரியின் ரூ.5.30 லட்சம்; சோதனைச்சாவடி போலீசார் அமுக்கினரா?

Added : மே 14, 2020
Share
Advertisement

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில், சர்க்கரை வியாபாரியின், 5.30 லட்சம் ரூபாயை, குரங்குகள் தூக்கிச்சென்றதாக, சோதனைச்சாவடி போலீசார் தெரிவித்தனர். அதேநேரம், 25 நிமிடம், 'சிசிடிவி' கேமரா செயல்படாததால், போலீசாரே அமுக்கினரா என, விசாரணை நடக்கிறது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டைச் சேர்ந்தவர் அப்துல்லா, 45; சர்க்கரை வியாபாரி. இவரிடம், தாரமங்கலத்தைச் சேர்ந்த முருகன், 40; லாரி டிரைவராக பணிபுரிகிறார். இவர், கடந்த, 9ல், லாரியில், 5.30 லட்சம் ரூபாயை, பையில் வைத்துக்கொண்டு, ஏற்காட்டுக்கு எடுத்துச்சென்றார். மலைப்பாதை சோதனைச்சாவடியில், பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ.,க்கள் முருகேசன், பத்மநாபன், மாதேஷ் ஆகியோர், லாரியை சோதித்து அனுப்பினர். இதனிடையே, லாரியிலிருந்த பணப்பை மாயமானது. இதுகுறித்து, முருகன் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரித்த நிலையில், சோதனைச்சாவடியில் லாரி நிறுத்தப்பட்டபோது, பணம் மாயமானது தெரியவந்தது. எஸ்.பி., தீபாகானிகேர் உத்தரவுப்படி, ஊரக டி.எஸ்.பி., உமாசங்கர், சோதனைச்சாவடியில் பணியிலிருந்த போலீசாரிடம் விசாரித்தார். அதில், பணப்பையை குரங்கு எடுத்ததாகவும். பண கட்டுகளை வெளியே தூக்கி வீசியதாகவும் தெரிவித்தனர். பின், அப்பணத்தை குரங்கிடமிருந்து மீட்டு, சோதனைச்சாவடியில் வைத்தோம். பின், பணியில் இணைந்தவர்களிடம், அதுகுறித்து தெரிவிக்கவில்லை எனக்கூறினர். இதனால், இச்சம்பவ உண்மை நிலையை அறிய, டி.எஸ்.பி., அங்குள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தார். அப்போது, லாரி சென்ற நேரத்தில், 25 நிமிடம், கேமரா செயலிழந்தது தெரிந்தது. தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், கேமரா அணைத்து வைக்கப்பட்டதா, உண்மையில் செயலிழந்ததா என சோதிக்கின்றனர். அதேநேரம், இச்சம்பவத்தில் சிக்கிய போலீசார், வேறு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து, போலீசார் மீதான நடவடிக்கை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X