சென்னையிலிருந்து வந்த 16 பேருக்கு பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையிலிருந்து வந்த 16 பேருக்கு பரிசோதனை

Added : மே 14, 2020
Share
ஆத்தூர்: சென்னையிலிருந்து ஆத்தூர் வந்த, 16 பேருக்கு, 'கொரோனா' பரிசோதனை செய்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வெளிநாடு, வெளிமாநிலம் மட்டுமின்றி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வருவோரை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை செய்ய, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன்படி, சென்னையிலிருந்து, ஆத்தூருக்கு, நேற்று முன்தினம் வந்த, 26 வயது பெண் உள்பட, 16 பேருக்கு, அரசு

ஆத்தூர்: சென்னையிலிருந்து ஆத்தூர் வந்த, 16 பேருக்கு, 'கொரோனா' பரிசோதனை செய்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெளிநாடு, வெளிமாநிலம் மட்டுமின்றி, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வருவோரை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை செய்ய, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன்படி, சென்னையிலிருந்து, ஆத்தூருக்கு, நேற்று முன்தினம் வந்த, 26 வயது பெண் உள்பட, 16 பேருக்கு, அரசு மருத்துவமனைகளில், 'கொரோனா'பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வெளி மாநிலங்களிலிருந்து வந்த, 28 பேருக்கு, பரிசோதனை செய்துள்ளனர். அவர்களது வீடுகளில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறையினர் கூறியதாவது: சென்னையிலிருந்து வந்த, 16 பேர் உள்பட, 44 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று(நேற்று) ஒருவருக்கு, மல்லியக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனை செய்துள்ளோம். இதுவரை, 43 பேருக்கு தொற்று இல்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரவேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

65 தொழிலாளர் தங்கவைப்பு: கர்நாடகாவில், கூலிவேலை செய்து கொண்டிருந்த, பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலைக்குட்பட்ட தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், அங்கிருந்து, 65 தொழிலாளர், இரு பஸ்கள் மூலம், நேற்று பெரியகிருஷ்ணாபுரம் வந்து சேர்ந்தனர். அவர்கள், அங்குள்ள கஸ்தூரிபா காந்தி உறைவிடப்பள்ளி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின், மலைக்கிராமங்களுக்கு பாதுகாப்போடு அழைத்துச்செல்ல, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, பி.டி.ஓ., தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X