பொது செய்தி

தமிழ்நாடு

'சஸ்பெண்ட்' இன்ஸ்பெக்டர் எஸ்.பி.,க்கு கடிதம்: புறமுதுகு காட்டி நடுநிசியில் விரட்டப்பட்டதாக தகவல்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆத்தூர்: 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.பி.,க்கு அளித்த கடிதத்தில், 'புறமுதுகு காட்டி நடுநிசியில் விரட்டியடிக்கப்பட்டு ஓடும் நான்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் சப் - டிவிஷன், வீரகனூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர், 58. இவர், அப்பகுதியைச் சேர்ந்த, மணல் கடத்தும் கும்பலிடம், மொபைல் போனில், 'பேரம்' பேசியுள்ளார். இதையடுத்து,

ஆத்தூர்: 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.பி.,க்கு அளித்த கடிதத்தில், 'புறமுதுகு காட்டி நடுநிசியில் விரட்டியடிக்கப்பட்டு ஓடும் நான்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் சப் - டிவிஷன், வீரகனூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர், 58. இவர், அப்பகுதியைச் சேர்ந்த, மணல் கடத்தும் கும்பலிடம், மொபைல் போனில், 'பேரம்' பேசியுள்ளார். இதையடுத்து, எஸ்.பி., தீபாகானிகேர் உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டருக்கு வழங்கிய ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த, 8ல், டி.ஐ.ஜி., பிரதீப்குமார், இன்ஸ்பெக்டரை, 'சஸ்பெண்ட்'செய்தார். 10ல், எஸ்.பி.,க்கு, இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர், பொருட்கள் ஒப்படைப்பு விபரத்துடன் கடிதம் வழங்கினார்.

அதன் விபரம்: நான் வசித்து வந்த இன்ஸ்பெக்டர் குடியிருப்பின் சாவி, தண்ணீர் மோட்டார், நான்கு மின்விசிறி, தலா, ஐந்து டியூப்லைட், குண்டுபல்பு, வாக்கிடாக்கியை, எஸ்.எஸ்.ஐ., ராமசாமியிடம் ஒப்படைத்துள்ளேன். தற்காலிக பணி நீக்கத்தில், புறமுதுகு காட்டி நடுநிசியில் விரட்டியடிக்கப்பட்டு ஓடும் நான், சம்பளம் பெறக்கூடிய பாரத ஸ்டேட் வங்கி கணக்கை நீக்கி விடுகிறேன். மீண்டும் போலீஸ் ஸ்டேஷன், மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டால், என் மனநிலை வேறுபடியாக அமையும் என்பதால், வீட்டுக்கு செல்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-மே-202013:26:29 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan லஞ்சம் வாங்குபவரை கைது செய்யாமல் ஏன் காவல்துறை சஸ்பெண்ட் செய்கிறது என்பது மர்மமாகவே உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X