கபசுர குடிநீர் பரிந்துரை எதிரொலி: நாட்டு மருந்து கடைகளில் விற்பனை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் பரிந்துரை எதிரொலி: நாட்டு மருந்து கடைகளில் விற்பனை அதிகரிப்பு

Added : மே 14, 2020
Share

சேலம்: கபசுர, நிலவேம்பு குடிநீரை, அரசு பரிந்துரைத்த நிலையில், நாட்டு மருந்து கடையில் விற்பனை அதிகரித்துள்ளது.
சேலத்தில், கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில், நாட்டு மருந்து கடைகள் செயல்படுகின்றன. அங்கு, சித்த மருத்துவ சூரணம், லேகியம், பற்பம், மூலிகை உள்ளிட்ட மருந்துகள் விற்கப்படுகின்றன. இரு மாதமாக, பல்வேறு உடல் பிரச்னைக்கு மருத்துவமனை செல்ல முடியாத நிலை உள்ளது. அத்துடன், 'கொரோனா' தடுப்புக்கு, கபசுர, நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றை, அரசே பரிந்துரைத்துள்ளது. இதனால், மக்களிடையே பாரம்பரிய சித்த மருந்து மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. பலரும், தற்போது சளி, காய்ச்சல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைக்கு, நாட்டு மருந்து கடையை நாட தொடங்கியுள்ளனர். மேலும், கபசுர, நிலவேம்பு குடிநீர் சூரணம் வாங்கவும், நாட்டு மருந்து கடைகளை நாடுகின்றனர். இதனால், சேலத்திலுள்ள நாட்டு மருந்து கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. சமூக இடைவெளியில் நின்று, மருந்து வாங்கி செல்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X