இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (3)
Share
india, coronavirus_update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 14) காலை 9.00 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது. 78,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,549 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,281 லிருந்து 78,003 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,415 லிருந்து 2,549 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,386ல் இருந்து 26,235 ஆகவும் அதிகரித்தது. 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,722 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 134 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 25,922 - 975
குஜராத் - 9,267 - 566
தமிழகம் - 9,227 - 64
டில்லி - 7,998 - 106
ராஜஸ்தான் - 4,328 - 121
மத்திய பிரதேசம் - 4,173 - 232
உத்தர பிரதேசம் - 3,729 - 83
மேற்கு வங்கம் -2,290 - 207
ஆந்திரா - 2,137 - 47
பஞ்சாப் - 1,924 - 32
தெலுங்கானா - 1,367 - 34
காஷ்மீர் - 971 - 11
கர்நாடகா - 959 - 33
பீஹார் - 940 - 07
ஹரியானா - 793 - 11
ஒடிசா - 538- 03
கேரளா -534 04
சண்டிகர் - 187 - 03
ஜார்க்கண்ட் - 173 - 03
திரிபுரா- 155 - 0
அசாம் - 80 - 02
உத்தரகாண்ட் - 72 - 1
ஹிமாச்சல பிரதேசம் - 66 - 02
சத்தீஸ்கர் - 59 - 0
லடாக் - 43 - 0
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 13 - 0
கோவா- 07 - 0
மணிப்பூர் - 02 - 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X