பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் நடப்பதை மக்கள் தவிர்க்க அறிவுரை

Added : மே 14, 2020
Share
Advertisement

சேலம்: ரயில் தண்டவாளத்தில் நடப்பதையோ, ஓய்வெடுப்பதையோ மக்கள் தவிர்க்க, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுதும், கடந்த மார்ச், 25 முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணியர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பலரும் தண்டவாளங்களில், நடப்பது, ஓய்வெடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாளுக்கு முன், ரயில்வே டிராக்கில் தூங்கிய தொழிலாளர்கள், ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பயணியர் ரயில் சேவை இல்லாத நிலையில், கார்கோ எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், உயிரிழப்பை தவிர்க்க, தண்டவாளத்தில் மக்கள் நடப்பது, ஓய்வெடுப்பது, அமர்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X