பொது செய்தி

தமிழ்நாடு

15வது நிதிக்குழு மானிய நடைமுறை: பணி பட்டியலை 16க்குள் பதிய உத்தரவு

Added : மே 14, 2020
Share
Advertisement

மேட்டூர்: மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானியம், கடந்த ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வந்ததால், அதன் அடிப்படையில் செய்ய வேண்டிய பணி குறித்த விபரத்தை, 16க்குள் பதிய, ஊரக வளர்த்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 385 ஒன்றியங்களில், 12 ஆயிரத்து, 620 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சிகளில் திட்ட பணி நிறைவேற்ற, மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானியம், கடந்த ஏப்., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மானியத்தில், 50 சதவீதம் பொது நிதி. அதில், மூலதன பணியை மேற்கொள்ள வேண்டும். மீதி நிதியில், 25 சதவீதம் குடிநீர் திட்ட பணி, 25 சதவீதம், உள்ளாட்சிகளில் மலம் கழித்தலற்ற திட்ட பணியை நிறைவேற்றுதல், கழிவுநீர் சுழற்சி செய்தல், மழைநீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்தல் போன்ற பணிக்கு பயன்படுத்த வேண்டும். அந்த பணிகளை தேர்வு செய்து, ஒன்றிய குழு, ஊராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, வரும், 16க்குள் கணினியில் பதிய, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அனைத்து ஊராட்சிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X