பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கட்டாய வசூல்: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீது புகார்

Added : மே 14, 2020
Share
Advertisement

சேலம்: தனியார் பள்ளி வாகனங்களுக்கு வரி செலுத்த கட்டாயப்படுத்துவதாக, பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் பஸ், வேன்கள் இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்களுக்கு சாலை, இருக்கை வரிகள், இன்சூரன்ஸ் கட்ட மத்திய மாநில அரசுகள், ஜூன், 30 வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுக்க அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களும், பள்ளி நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து, பள்ளி வாகன சாலை, இருக்கை வரிகளை கட்ட வற்புறுத்துகின்றனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிவிலக்கு ஆணை எங்களுக்கு வரவில்லை. அதனால் ஏற்க முடியாது எனக்கூறி, வரிகளை செலுத்தாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என மிரட்டல் விடுக்கின்றனர். ஊரடங்கு காலத்தில், பழைய, புதிய கல்வி கட்டணம் வசூலிக்கக்கூடாது, பள்ளி செயல்படக்கூடாது என அரசு வலியுறுத்தும் நிலையில், பள்ளி நிர்வாகிகள், இந்த மிரட்டல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக முதல்வர் தலையிட்டு, விதிவிலக்கு ஆணைப்படி செயல்பட, மார்ச் முதல், ஜூன் வரை, ஓடாத வாகனங்களுக்கு வரிவிலக்கு, எப்.சி., வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X