பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் தி.மு.க., - எம்.பி., நிவாரண பொருள் வழங்கல்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேலம்: தி.மு.க.,வின் சேலம் எம்.பி., பார்த்திபன், தன் சொந்த பணம், 63 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும், 48 ஆயிரம் குடும்பத்துக்கு, தலா, 5 கிலோ அரிசி, காய்கறி, கையுறை, முகக்கவசம், கிருமிநாசினியை வழங்கி வருகிறார். அவர்கள் மட்டுமின்றி, தூய்மைப்பணியாளர், அமைப்புசாரா பணியாளர், மருத்துவர், செவிலியருக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 47ம் நாளாக, சேலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, நங்கவள்ளி ஒன்றிய பகுதிகளிலிருந்து, உதவி கேட்டு வந்த, 300 குடும்பத்துக்கு, தலா, 5 கிலோ அரிசியை, எம்.பி., பார்த்திபன் வழங்கினார். இதில், சேலம் மத்திய மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குள்ளுபடையாச்சி, பூலாவரி மாணிக்கம், மத்திய மாவட்ட மாநகர வக்கீல் அணி துணை அமைப்பாளர் லட்சுமணபெருமாள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
15-மே-202006:56:38 IST Report Abuse
RAMAKRISHNAN K எவனாவது சொந்த பணம் ரூ.63 லட்சத்தை எடுத்து தானம் செய்வானா? அதையும் நம்ப முடியுமா? கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு துண்டுதான் அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X