பொது செய்தி

தமிழ்நாடு

கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி இயந்திரம் வைப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில், 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், பல்வேறு பணிகள் காரணமாக தினமும், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது போன்று வருவோரால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில், முதன்முறையாக அரூர் டவுன் பஞ்., அலுவலகத்தில், கைகளை சுத்தம் செய்வதற்கு வசதியாக, கால்களால் உபயோகப்படுத்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கையால் எதையும் தொடக்கூடாது என்பதற்காக, காலால் அழுத்தி அதன் மூலம் வரும் கிருமி நாசினியை, தண்ணீர் கொண்டு கையை கழுவும் இயந்திரத்தை இயக்கி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரூர் சப்-கலெக்டர் பிரதாப் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதே போன்று, அரூரில் உள்ள வணிக வளாகங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி இயந்திரத்தை பயன்படுத்த, நடவடிக்கை எடுக்குமாறு டவுன் பஞ்., சார்பில், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X