முள்ளங்கி விலை வீழ்ச்சி: ஏற்றுமதி வியாபாரிகள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முள்ளங்கி விலை வீழ்ச்சி: ஏற்றுமதி வியாபாரிகள் பாதிப்பு

Added : மே 14, 2020
Share
தர்மபுரி: முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஏற்றுமதி செய்ய முடியாமல், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வரும், 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 11 முதல் ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, 34 வகையான கடைகள் திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காய்கறி ஏற்றுமதி செய்யும்

தர்மபுரி: முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஏற்றுமதி செய்ய முடியாமல், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வரும், 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 11 முதல் ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, 34 வகையான கடைகள் திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காய்கறி ஏற்றுமதி செய்யும் விற்பனை டீலர்கள், பல்வேறு காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி, ஏற்றுமதி செய்து வருகின்றனர். தற்போது முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், கத்தரி, தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள், அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், காய்கறி ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், முள்ளங்கி கிலோ, 8 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். இதையும் வாங்க ஆளில்லாததால், முதலீடு கூட கிடைக்காமல், ஏற்றுமதி வியாபாரிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X