பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் கிருமி நாசினி தெளிக்க 'ஏர்கம்ப்ரசர்' வாகனம்

Added : மே 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள குறுகிய வீதிகளில், ஏர்கம்ப்ரசர் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வரும், 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடந்த, 11 முதல், 34 வகையான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிக அளவில் வீடுகளில் இருந்து வெளியே வர துவங்கியுள்ளனர். இந்நிலையில், நகராட்சி சார்பில் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குறுகிய வீதி மற்றும் குறுகிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்க, ஏர்கம்ப்ரசர் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து, குறுகிய வீதிகளில் உள்ள வீடுகளுக்கு, 100 மீட்டம் தூரம் வரை குழாய் மூலம் கிருமி நாசினி தெளிக்க முடியும். இதை பயன்படுத்தி, நகராட்சி ஊழியர்கள், நகராட்சியில் உள்ள குறுகிய வீதிகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X