பொது செய்தி

தமிழ்நாடு

பொருட்கள் வாங்க வெளியே வர பாஸ் வழங்கும் பணி துவக்கம்

Added : மே 14, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில், பொருட்கள் வாங்க வீட்டில் இருந்து வெளியே வர, பாஸ் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. வரும், 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது, தற்போது, 34 வகையான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் வீட்டை விட்டு வெளிய வர துவங்கியுள்ளனர். இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து, சாலைகளில் தடுப்பு அமைத்து, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள மக்கள், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை, வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியேவர வாகன பாஸ் வழங்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நேற்று முதல் வாகன பாஸ் வழங்கும் பணியை, நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இப்பணியில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 33 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று, டூவீலர் பாஸ் வழங்கி வருகின்றனர். இந்த பாஸ் பெற்ற வாகன ஓட்டிகள், 15 வயதுக்கும் மேல், 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இவர்கள், வாரத்தின் இரண்டு நாட்கள் மட்டும், வீடுகளில் இருந்து பொருட்கள் வாங்க வெளியே வர அனுமதிக்கப்படுவர். இவர்களில், இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள் உள்ளிட்ட மூன்று கலர்களில் டூவீலர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X