சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா மதுபானம் விற்ற நான்கு பேர் கைது: 167 பாக்கெட் பறிமுதல்

Added : மே 14, 2020
Share
Advertisement

ஓசூர்: தளி பகுதியில், கர்நாடகா மதுபானம் விற்ற நான்கு பேரை கைது செய்த போலீசார், 167 மதுபான பாக்கெட்டை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் எஸ்.ஐ., சிவராஜ் தலைமையிலான போலீசார், மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக, கொடியாளத்தை சேர்ந்த முரளி, 27, டி.மல்லசந்திரத்தை சேர்ந்த மோட்டப்பா, 33, தளி கொத்தனூர் ராம் நகரை சேர்ந்த சிவா, 36, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அடுத்த நாகநாயக்கனஹள்ளியை சேர்ந்த யோகேஷ், 30, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 90 எம்.எல்., கொள்ளளவு கொண்ட, 167 மதுபான பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X