விவசாயி சரமாரியாக வெட்டி கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி சரமாரியாக வெட்டி கொலை

Added : மே 14, 2020
Share

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ், 33; விவசாயி. இவரை நேற்றிரவு வீட்டின் முன்புறம் வைத்து, மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் முனிராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X