ஓசூர்: சூளகிரி அருகே, பெண்ணை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் உட்பட மூன்று பேரை, போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பெரிய தியாகரசனப்பள்ளியை சேர்ந்தவர், 29 வயது பெண். இவருக்கும், சுப்பிரமணி என்பவருக்கும், 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மணியங்கல் பகுதியை சேர்ந்த புருசோத்தமன் என்பவருக்கும், அப்பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த, 7 இரவு, 9:30 மணிக்கு, அப்பெண்ணும், புருசோத்தமனும், ஐஸ்வர்யா லே அவுட் அருகே உள்ள எட்டிப்பட்டி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெரிய தியாகரசனப்பள்ளியை சேர்ந்த ரமேஷ், 25, மது, 23, ராஜா, 23, ஆகிய மூன்று பேர் சேர்ந்து, புருசோத்தமனை அடித்து, உதைத்து விரட்டி விட்டு, அப்பெண்ணை மட்டும் தனியாக தூக்கி சென்றனர். அங்கு, ரமேஷ் அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் மாலை புகார் செய்தார். எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி., சங்கு, வாலிபர்கள் மூன்று பேரை தேடி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE