பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவில் இருந்து வந்த 32 பேர் கிருஷ்ணகிரியில் தங்க வைப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட வெளிமாவட்ட தொழிலாளர்கள், 32 பேர் கிருஷ்ணகிரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவால், தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அங்கேயே தங்கி இருந்தனர். இந்நிலையில், அம்மாநில அரசு தமிழக தொழிலாளர்கள், 42 பேரை நேற்று முன்தினம் பஸ் மூலம் அனுப்பி வைத்தது. முன்னதாக, கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினர். நேற்று காலை கிருஷ்ணகிரிக்கு வந்த திருப்பூர், சிவகங்கை, தூத்துக்குடி, சேலம், மதுரை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 42 தொழிலாளர்களை இறக்கிவிட்டனர். பின்னர், ஆந்திரா மாநில பஸ் மூலம், 10 தொழிலாளர்கள் மட்டும் சென்னைக்கு சென்றனர். மற்ற, 32 பேரும் ஊருக்கு செல்ல முடியாமல் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், 32 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் தங்க வைத்தனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். 32 தொழிலாளர்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X