பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் வண்டல் மண் எடுக்க ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் போட்டி

Added : மே 14, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில், வண்டல் மண் எடுக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் போட்டியிட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் முதல் முறையாக, 62 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டது. தண்ணீர் இல்லாததால், அணையை தூர்வார வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அணையில் இருந்து, 500 மீட்டர் தூரம் தள்ளி, வண்டல் மற்றும் களி மண்ணை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. வண்டல் மண் எடுக்க விருப்பம் உள்ள விவசாயிகள், வி.ஏ.ஓ. ஒப்புதழ் சான்றிதழுடன் தங்களது நிலத்தின் பட்டா மற்றும் சிட்டாவை கிருஷ்ணகிரி தாசில்தாரிடம் காண்பித்து, வண்டல் மண் எடுப்பதற்காக அனுமதியைப் பெற்று, பொதுப்பணித்துறையினர் குறிப்பிடும் இடத்தில் மண் எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு, 25 டிராக்டர் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, நேற்று காலை ஆளும்கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் கே.பி.முனுசாமி, வண்டல் மண் எடுப்பதற்கான பூமி பூஜையை கட்சி நிர்வாகிகளுடன், அணையின் பின்பகுதியில் துவக்கி வைத்தார். இதையறிந்த கிருஷ்ணகிரி, தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்குட்டுவன் நேற்று கே.ஆர்.பி., அணையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று, வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டுள்ளார். ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இருவரும் வண்டல் மண்ணை எடுக்க முயற்சித்து வருவதால், விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X