பொது செய்தி

தமிழ்நாடு

முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி: ஆடு, மாடுகளுக்கு உணவாகும் அவலம்

Added : மே 14, 2020
Share
Advertisement

ஓசூர்: முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பறிக்காமல் செடிகளில் விட்டுள்ளதால், அவற்றை ஆடு, மாடுகள் சாப்பிட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,000 ஹெக்டேர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி நடக்கிறது. 65 நாள் பயிரான முட்டைகோஸ், ஒரு ஏக்கருக்கு, 20 டன் வரை மகசூல் கிடைக்கும். 70 முதல், 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 500 ரூபாய்க்கு விலை போனால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் வரும். கொரோனா ஊரடங்கு காரணமாக, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட முட்டைகோஸ், வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியவில்லை. உள்ளூர் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்ததால், முட்டைகோஸ் விலை கிடுகிடுவென சரிய துவங்கியுள்ளது. விவசாயிகள் முட்டைகோஸ்களை, வாகனங்களில் ஏற்றி சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்தால், ஒரு மூட்டைக்கு, 160 ல் இருந்து, 200 ரூபாய் வழங்கப்படுகிறது. இது பறிப்பு கூலி, வாகன வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு கூட போதுமானதாக இல்லை. தோட்டத்திற்கு நேரடியாக வந்து வியாபாரிகளை வாங்கி செல்லுமாறு கூறினால், ஒரு மூட்டை முட்டைகோஸ், 30 ரூபாய்க்கு கீழ் கேட்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைப்பதில்லை. அவற்றை பறிக்காமல் வயல்களில் விட்டுள்ளனர். கெலமங்கலம் அடுத்த மல்லேபாளையம் பகுதியில், முட்டைகோஸ் பறிக்காமல் வயல்களில் விடப்பட்டுள்ளதால், ஆடு, மாடுகள் சாப்பிட்டு வருகின்றன. கெலமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா, தோட்டத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X