பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிறப்பு முகாம் அமைக்கும் பிரச்னை: அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மீது வழக்குப்பதிவு

Added : மே 14, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: கொரோனா சிறப்பு முகாம் அமைக்கும் பிரச்னையில், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் பி.சி. ராமசாமி உள்பட, 12 பேர் மீது, கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டாரத்தில் வெளி மாவட்டத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர்கள், வெளி மாவட்டத்திற்கு சென்று விட்டு, வீடு திரும்பியவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதில், 68 பேர் கண்டறியப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தி, கண்காணிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இவர்களுக்கான முகாம் தேடும் பணி கடந்த, 1, ல், ஈரோடு மாவட்ட திட்ட இயக்குனர் பாலகணேஷ் தலைமையில், மொடக்குறிச்சி, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜய்நாத் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், சென்னசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையை, முட்களால் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொரோனா பரிசோதனை மையம் அமைக்க இப்பள்ளியை விட்டுத்தர மாட்டோம் என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அண்ணாநகர் பகுதியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமியின் வீடு உள்ளது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அவ்வழியே வீட்டிற்கு சென்ற மாஜி அமைச்சர் ராமசாமி, அங்குள்ள பிரச்னைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் பதற்றம் அதிகரித்து போலீசார் குவிக்கப்பட்டனர். மக்களிடம் சமரசம் ஏற்படாததால், எழுமாத்தூர் கல்லூரிக்கு கொரோனா சிறப்பு முகாம் மாற்றப்பட்டது. இந்நிலையில், அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, கொடுமுடி ஆர்.ஐ. நிர்மலாதேவி, சென்னசமுத்திரம் வி.ஏ.ஓ., கவுதமி ஆகியோர், கொடுமுடி போலீசில் கடந்த, 1 ல்., புகார் அளித்தனர். இதையடுத்து, மாஜி அமைச்சர் பி.சி.ராமசாமி, பெரியவட்டம் குழந்தைவேல், சுப்பிரமணி உட்பட, 12 பேர் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க தவறியது, கூட்டம் கூடியது, தனிமனித இடைவெளியின்றி அரசுக்கு எதிராக கோஷமிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X