பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா சென்று திரும்பும் டிப்பர் லாரி டிரைவர்கள் சோதனை செய்யப்படாமல் தமிழகத்துக்குள் அனுமதி

Added : மே 14, 2020
Share
Advertisement

ஓசூர்: தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களை, கர்நாடகா அரசு நேற்று ஐந்தாவது நாளாக அனுமதிக்காத நிலையில், கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளை மட்டும் அனுமதித்தனர்.
கர்நாடகா மாநில எல்லையான, அத்திப்பள்ளி டோல்கேட் அருகே, கொரோனா தடுப்பு சோதனைச்சாவடி அமைத்துள்ள அம்மாநில அரசு, தமிழகத்தில் இருந்து இ-பாஸ் வாங்கி கொண்டு, அம்மாநிலத்திற்கு வாகனங்களில் செல்லும் தமிழர்களை, அங்கு செல்ல விடாமல் தடுத்து, மீண்டும் திருப்பி அனுப்பி வருகிறது. நேற்று, ஐந்தாவது நாளாக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து இ-பாஸ் வாங்கி கொண்டு, கர்நாடகா செல்லும் தமிழர்களை, கொரோனா நோயாளிகள் போல் சித்தரித்து, அனுமதிக்காத அம்மாநில அரசு, தமிழக எல்லையான ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லும், ஜல்லி, எம் சாண்ட் போன்ற கனிமவள லாரிகளை மட்டும் தொடர்ந்து அனுமதிக்கிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும், தமிழக எல்லையான ஜூஜூவாடியை கடந்து, 30 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் கர்நாடகா சென்று திரும்பி வருகின்றன. கர்நாடகா சென்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கு வரும் டிப்பர் லாரி டிரைவர்களை, தமிழக எல்லையான ஜூஜூவாடியில், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யாமல் அனுமதிக்கின்றனர். பிற மாநிலம் சென்று வந்தாலே தனிமைப்படுத்துமாறு, சுகாதாரத்துறை கூறி வரும் நிலையில், ஒரு நாளைக்கு பலமுறை டிப்பர் லாரி டிரைவர்கள் கர்நாடகா சென்று திரும்புகின்றனர். அந்த லாரி டிரைவர்கள் விபரம் கூட, மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X