பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தரகர் கைகளில் முட்டை 'மார்க்கெட்': விற்பனை விலையையே நிர்ணயிக்க கோரிக்கை

Added : மே 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''முட்டை மார்க்கெட், பண்ணையாளர்களிடம் இருந்து இடைத்தரகர் கைகளுக்கு சென்று விட்டது. அதனால், விற்பனை செய்யும் விலையையே, கொள்முதல் விலையாக, 'நெக்' நிர்ணயிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.
'கொரோனா வைரஸ்' தொற்று, பிராய்லர் கோழிகளை தாக்கியதாக, 'வாட்ஸ் ஆப்பில்' வைரலாக பரவியதால், மக்கள் பீதியடைந்தனர். அதனால், முட்டை நுகர்வு சரிந்து, விலை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில், நிலைமை சீரடைந்ததையடுத்து, படிப்படியாக உயர்ந்து, 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொள்முதல் விலை குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம், 320 காசாக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று, ஐந்து காசு உயர்த்தப்பட்டு, கொள்முதல் விலை, 325 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: இந்த விலை குறைவுக்கு, வியாபாரிகளின் அரசியல், பண்ணைக்காரரிடம் இருந்து, இடைத்தரகர்களிடம் மார்க்கெட் சென்று விட்டது ஆகியவை காரணம். மைனஸ் நெக் ரேட் இருந்தபோது, பண்ணையார்களிடம் மார்க்கெட் இருந்தது. முட்டை விலை மைனஸ் போகும்போது, மார்க்கெட், இடைத்தரகர்களிடம் சென்றுவிட்டது. 'நெக்' நிர்ணயிக்கும் கொள்முதல் விலையில் இருந்து, 20 காசு குறைக்கின்றனர். மேலும், ஐதராபாத் மண்டலத்தில், 10 காசு குறைந்தால், இங்கும், 10 காசு குறைக்கின்றனர். மேலும், பண்ணையாளர்களிடம் பணம் இல்லாத நிலையில், கையில் பணத்தை வைத்துக் கொண்டு இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். அதனால், இந்த பிரச்னை இருக்கிறது. கொள்முதல் விலையில் இருந்து, 50 காசு குறைக்கப்பட்ட நிலையில், படிப்படியாக குறைந்து, தற்போது, 30 காசாக உள்ளது. தற்போது, 325 காசாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, 30 காசு குறைத்து, 295 காசுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், விற்பனை செய்யும் விலையையே, 'நெக்' நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X