தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட 77 பேரும் பூரண குணம்: 'கொரோனா' இல்லாத மாவட்டமானது நாமக்கல்

Added : மே 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: பாதிக்கப்பட்ட, 77 பேரும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக, நாமக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், ப.வேலூர், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில், 26 பேர், டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தது தெரிந்தது. அவர்கள், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். பரிசோதனை முடிவில், டில்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்கள் மனைவி, மகள், மகன், குழந்தை பெற்றெடுத்த பெண், நர்சு, சிறுவன். மேலும், வாலிபர், அவரது மனைவி, மாமனார், போலீஸ்காரர், லாரி டிரைவர்கள், ஐந்து மாத குழந்தை, அதன் அப்பா, அம்மா, பாட்டி, ஆறு லாரி டிரைவர்கள், லோடு மேன்கள், இரண்டு கர்ப்பிணிகள் உள்பட, 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில், 62 பேர், குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 15 பேர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அவர்களும் பூரண குணமடைந்தனர். அவர்களை, கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., அருளரசு, மருத்துவ கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 5,600 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 77 பேருக்கு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் வரை, 62 பேர் குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இன்று (நேற்று), 15 பேர் சிகிச்சை முடிந்து, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தேதி வரை, நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒருவர் கூட இல்லை. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களுக்கு, 15 நாட்களுக்கான கபசுர குடிநீர், வைட்டமின் சி, ஹோமியோபதி மருந்து மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய, இரு, 'கிட்' வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 14 நாட்களுக்கு, கொரோனா தொற்று இல்லாமல் இருந்தால், ஆரஞ்ச் மண்டலமாக, நாமக்கல் மாவட்டம் மாற்றப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X