பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் விஜய்சேதுபதி மீது ஆரணி போலீசில் புகார்

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவண்ணாமலை: இந்துக்கள் மனம் புண்படுத்தும்படி, பேசிய நடிகர் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆரணி டவுன் போலீசில், பா.ஜ., வினர் புகார் செய்தனர். திருவண்ணாமல மாவட்டம், ஆரணி நகர, பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயகோபி தலைமையில், நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆரணி டவுன் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: சமீபத்தில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, கோவில்களில் சுவாமிக்கு அபி ஷேகம் செய்வது குறித்து, இந்துக்கள் மனம் புண்படும்படி விமர்சித்துள்ளார். இதற்கு முன்பு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இப்படியாக, தொடர்ந்து இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிவரும், நடிகர் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202011:14:08 IST Report Abuse
TT. குமார் இவர் எப்போதும் முழுமையாக ஆராயாமல் தனக்கு தெரிந்த கருத்தை மட்டுமே வைத்து மக்களின் மனதில் துவேசங்களை வளர்த்து வருகிறார். இந்து மதமல்ல அவை சனாதன தர்மம் அவற்றை ஆராய்ந்தால் தான் யார் என்பதும் சமுதாயம் சடங்குகள் ஏன் என்பதும் இயற்கையோடு நம்மை தொடர்புபடுத்தி வாழ கற்று கொடுப்பதோடல்லாமல் உலகில் உள்ள எந்த உயிர்களுக்கும் தீங்கு நினையாத எண்ணங்களும் மனதில் சம தர்ம சிந்தனையையும் தோன்ற வைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X