பொது செய்தி

இந்தியா

642 சிறப்பு ரயில்கள் இயக்கிய ரயில்வே

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement
Railway, Migrants, Special Train, Shramik Special trains, migrant workers, Railways, ரயில்வே, புலம்பெயர்ந்த,தொழிலாளர்கள், சிறப்புரயில், இயக்கம்

புதுடில்லி: நேற்று (மே 13) வரை வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை அழைத்து செல்ல நாடு முழுவதும் 642 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், வெளி மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு செல்ல வசதியாக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, பலரும் சொந்த மாநிலங்கள் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மே 13) வரை நாடு முழுவதும் 642 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.


latest tamil news


இதில் உத்தர பிரதேசத்திற்கு 301 ரயில்களும், பீகாருக்கு 169 ரயில்களும், மத்திய பிரதேசத்திற்கு 53 ரயில்களும், ஜார்கண்ட்டிற்கு 40 ரயில்களும், ஒடிசாவிற்கு 38 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல், ராஜஸ்தான் - 8, மேற்குவங்கம் - 7, சத்தீஸ்கர் -6, உத்தரகாண்ட் - 4, ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், மஹாராஷ்டிரா தலா - 3, தமிழகம், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், மிசோரம், தெலுங்கானா, திரிபுரா மாநிலங்களுக்கு தலா 1 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X