பொது செய்தி

இந்தியா

சாலை விபத்துகளில் 16 வெளிமாநில தொழிலாளர்கள் பலி

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
குணா: ம.பி., உ.பி., பீஹார் மாநிலங்களில் நடந்த சாலை விபத்துகளில் 16 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிகாலையில் விபத்துமஹாராஷ்டிராவில் இருந்து டிரக் ஒன்று, 70 வெளிமாநில தொழிலாளர்களுடன் உ.பி., நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு, ம.பி., மாநிலம் குணா மாவட்டத்தில், புறவழிச்சாலையில் டிரக் மீது, ஆமதாபாத்
migrant workers, migrants, coronavirus lockdown,
வெளிமாநிலதொழிலாளர்கள், மஹாராஷ்டிரா, மகாராஷ்டிரா, மகா, மஹா, மபி, மத்தியபிரதேசம், ம.பி., பீஹார், உத்தரபிரதேசம், உ.பி., உபி, பஞ்சாப், பஸ், டிரக், மோதல், சாலைவிபத்து, உயிரிழப்பு, பலி, காயம், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்ததொழிலாளர்கள்

குணா: ம.பி., உ.பி., பீஹார் மாநிலங்களில் நடந்த சாலை விபத்துகளில் 16 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 74 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதிகாலையில் விபத்து

மஹாராஷ்டிராவில் இருந்து டிரக் ஒன்று, 70 வெளிமாநில தொழிலாளர்களுடன் உ.பி., நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு, ம.பி., மாநிலம் குணா மாவட்டத்தில், புறவழிச்சாலையில் டிரக் மீது, ஆமதாபாத் நோக்கி அதிவேகமாக சென்ற பஸ் மோதியது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.


பஸ் ஏறியதில் 6 பேர் பலி


latest tamil newsபீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் பஞ்சாபில் வேலைபார்த்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே வந்துள்ளனர். உ.பி., மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் அவர்கள் நடந்து வந்த போது, பஸ் மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பீஹாரின் கோபால்கஞ்ச், ஒருவர் பாட்னா மற்றுமொருவர் போஜ்புர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


பீஹாரில் இருவர் பலி

பீஹாரின் முசாபர்புர் நகரில் இருந்து 32 வெளிமாநில தொழிலாளர்களுடன் கதிகார் என்ற இடத்திற்கு பஸ் சென்று கொண்டிருந்தது. சமஸ்திபுர் என்ற இடத்தில் பஸ்சும் டிரக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
14-மே-202018:49:42 IST Report Abuse
Loganathaiyyan In a accident people died why "Pulam peyarndha" Why don't you include that in that
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202016:28:52 IST Report Abuse
Lion Drsekar Today i have witnessed hundreds of Other state youngsters ( male and female) are coming by tempos and other vehicles, they were stopped at velachery and made them to walk , they are walking in the hot sunlight like refuges. Some of them are not able to walk, walking with a stick . They dont know where they are going due to starving and thrust. Due to this accidents they are all met with an accident, Govt has to provide some transport and safely them at their destination, It will be lower cost than the daily maintenance. Vandhe madaram
Rate this:
Cancel
14-மே-202014:14:07 IST Report Abuse
ஆப்பு பலே...பலே... தினசரி விபத்துக்களில் தொழிலாளர்கள் இறப்பது உறுதியாகிவிட்டது. நிலைமை சாதாரணமாகி விட்டது. கொரோனாவுக்கு பலியாக வில்லை. விரைவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம். வெளிநாடு போய் விருதுகளை வாங்கிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X