நெல்லை: திருநெல்வேலி, தென்காசியில் ஒரேநாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (மே 14) ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மும்பையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் சோதனை சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடக்கிறது. ராதாபுரம், பணகுடி அருகே பாம்பன்குளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. மானுார் மாவடியை சேர்ந்த ஒருவருக்கும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ராதாபுரம், பழவூரை சேர்ந்த இருவர், கூந்தன்குளத்தை சேர்ந்த 44 வயது ஆண், பார்பரம்மாள்புரத்தை சேர்ந்த 30 வயது ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியானது. தென்காசி மாவட்டம் பொய்கையை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு தொற்று உறுதியானது. பனவடலிசத்திரத்தை சேர்ந்த 43 வயது ஆணுக்கும் தொற்று உறுதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE