ஜெனிவா: கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகாது. உலக மக்கள் அனைவரும் அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் மைக்கேல் ரேயன் கூறியதாவது: முதல்முறையாக புதிய வைரஸ் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. இந்த பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பது கடினம். நமது சமூகத்தில் உள்ள மற்றொரு வைரசாக, கொரோனா மாறியுள்ளது. இது நம்மை விட்டு எங்கும் போகாது. எச்ஐவி வைரஸ் எங்கும் செல்லவில்லை. இங்குதான் உள்ளது. அந்த வைரசை நாம் புரிந்து கொண்டோம். அது போல் கொரோனா வைரஸ் நம்மை விட்டு எங்கும் செல்லாது.

உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஊரடங்கு சிறப்பாக வேலை செய்துள்ளது. அதனை தற்போது திறந்துவிடுவது சிறப்பானது என சிலர் நினைக்கின்றனர். ஆனால், இரண்டும் ஆபத்தானவை. கொரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது. கொரோனா நமக்கு பல நல்லவற்றை கொண்டுவந்துள்ளது. மோசமானதையும் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE