பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 6 டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
chennai news, chennai coronavirus, tamil nadu news, tn news,  Royapuram zone, tamil nadu coronavirus, covid 19,
சென்னை, மண்டலம், ராயபுரம், மண்டலவாரியாக, கொரோனா, வைரஸ், பாதிப்பு, போராட்டம், தடை, அபராதம், காவல்துறை

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 6 டாக்டர்கள், மருத்துவபணியாளர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 890 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் 835 பேர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




latest tamil news



அடுத்த இடங்களில், தேனாம்பேட்டை 564, வளசரவாக்கம் 450, அண்ணாநகர் 448, தண்டையார்பேட்டை 402, அடையாறு 290, அம்பத்தூர் 254, திருவொற்றியூர் 120, மாதவரம் 72, மணலி 66, சோழிங்கநல்லூர், பெருங்குடி தலா 64, ஆலந்தூர் 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 20 பேரும் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


latest tamil news




போராட்டம் நடத்த தடை:


சென்னையில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை மே 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 4,68,513 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களிடம் ரூ.5.43 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
14-மே-202012:12:53 IST Report Abuse
Krishna India-Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Even Positive BUT ScapeGoat-Fool-Terrorise People-Misuse of Powers &Corona Terrorism (Abroad- Even PMs & Bureaucrats-Affected). Punish All Anti-People Corona Terrorists (Health-Police Officials & Testers Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc). Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are V.Small & V.Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Medical Terrorism) BUT Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (QUARANTINE THEM IN ANDAMANS & LAKSHADEEP). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). DISEASE IMPORTED BY IDIOTIC RULERS &OFFICIALS by Bringing Overseas Citisens. DISEASE ALSO SPREADS BY AIR (All Isolation-Quarantine-HotSpot-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown for 15days is Sufficient Extendable if Really required Testing Done for Outgoing Persons & Symptomcs). HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULERS &OFFICIALS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X