'மருத்துவரின் எச்சரிக்கையை ஏற்க முடியாது': ஊரடங்கை தளர்த்த டிரம்ப் முடிவு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கும், கொரோனா தடுப்புப் பணிகளை வழிநடத்தும் மருத்துவருக்கும் இடையே மேதல் வெடித்துள்ளதால், கொரோனா ஒழிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.உலகளவில் இதுவரை, 43.45 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் அமெரிக்காவில் மட்டும், 14.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 84,764 பேர் உயிரிழ்துள்ளனர்.கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கும், கொரோனா தடுப்புப் பணிகளை வழிநடத்தும் மருத்துவருக்கும் இடையே மேதல் வெடித்துள்ளதால், கொரோனா ஒழிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உலகளவில் இதுவரை, 43.45 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் அமெரிக்காவில் மட்டும், 14.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 84,764 பேர் உயிரிழ்துள்ளனர்.


latest tamil news
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 3.3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதில் சில ஆயிரம் பேர், ஊரடங்கை தளர்த்தி பணிக்கு செல்ல அனுமதி வழங்கக் கோரி, பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக, 'ஊரடங்கை தளர்த்தி பள்ளிகளையும், தொழில் நிறுவனங்களையும் திறக்க வேண்டும்' எனக் கூறினார். 'டிரம்ப், பாதிப்பை உணராமல் இவ்வாறு தெரிவிக்கிறார். இதை ஏற்று ஊரடங்கைத் தளர்த்த முடியாது' என, மாகாண ஆளுநர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.latest tamil newsஇந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில், அமெரிக்காவின் முகமாக இருக்கும், மருத்துவர் ஆண்டனி பெவுசி, 'அமெரிக்காவில் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தால், தேவையற்ற மரணங்கள் அதிகரிக்கும். குறிப்பா, பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளை இப்போது திறந்தால், கொரோனா வைரசின் தாக்கம் பல மடங்குகள் அதிகமாகும்' என, அமெரிக்க செனட்டுகளிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஊரடங்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் டிரம்ப், 'மருத்துவர் பெவுசியின் எச்சரிக்கையை ஏற்க முடியாது' எனத் தெரிவித்துள்ளதார்.


latest tamil news'அதிபருக்கும், கொரோனா தடுப்புப் பணிகளை வழிநடத்தும் மருத்துவருக்கும் இடையே, மேதல் வெடித்துள்ளதால், மருத்துவரின் உத்தரவைக் கேட்பதா அல்லது அதிபரின் கட்டளைக்கு கட்டுப்படுவதா என்ற நிலையில் அதிகாரிகள் தள்ளப்படுவர். இது கொரோனா தடுப்புப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல' என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
14-மே-202017:37:08 IST Report Abuse
S. Narayanan He is ready face everything.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
14-மே-202016:11:35 IST Report Abuse
Raj trump always a tough person wont understand the reality
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
15-மே-202001:44:07 IST Report Abuse
தல புராணம்அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க மண்டையில் மூளை சிறிதளவாவது இருக்கணும். பிறப்பாலேயே மனிதநேயமற்று ஜென்மமெடுத்த மிருகம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X