சென்னை: காசுக்கு ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் அரசு வாதாடிக் கொண்டிருப்பதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் அத்யாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பதா என விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மே 17ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல அரசு முடிவு செய்தது. இது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE