பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு முடிந்தவுடன் இயக்க மாவட்டத்தில் 270 பஸ்கள் தயார்

Added : மே 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: ஊரடங்கு முடிந்தவுடன் இயக்க, நாமக்கல் மாவட்டத்தில், 270 பஸ்கள் தயாராக உள்ளன. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. மார்ச், 24 முதல், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன, பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேபோல், ஏப்., 15, மே, 4 என, இரண்டு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, மற்ற வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இருந்தும், பஸ், ரயில் போக்குவரத்து, விமானங்கள் சேவைக்கு தொடர்ந்து தடை உள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன், மாநிலம் முழுவதும், 50 சதவீத பயணிகளுடன், பஸ் போக்குவரத்தை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், பஸ்களை இயக்காமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து, சேலம் கோட்ட, நாமக்கல் மேலாளர் காங்கேயன் கூறியதாவது: மாவட்டத்தில், நாமக்கல்லில் அரசு போக்குவரத்து கழக இரண்டு பணிமனைகளில், 120, ராசிபுரத்தில், 80, திருச்செங்கோட்டில், 70 என, மொத்தம், 270 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும், பராமரிக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதுடன், டிரைவர், கண்டக்டர்களும் பணிக்கு திரும்ப தயாராக உள்ளனர். அரசு உத்தரவுப்படி செயல்பட தயாராக இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X