மாற்று வேலைக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று வேலைக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்

Added : மே 14, 2020
Share

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், விசைத்தறி கூடங்கள் திறக்கப்படாததால், தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு செல்ல துவங்கியுள்ளனர். பள்ளிபாளையம் நகராட்சியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஊரடங்கு உத்தரவால், 45 நாட்களுக்கு மேலாக விசைத்தறி கூடங்கள் செயல்படவில்லை. வருமான இழப்பு ஏற்பட்டு, உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட தொழில்களுக்கு தளர்வு ஏற்படுத்தி, அனுமதி வழங்கப்பட்டதால், பெரும்பாலான விசைத்தறி தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். குறிப்பாக பெயின்டிங், கட்டுமானம் போன்ற வேலைகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் செல்ல துவங்கியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X