பொது செய்தி

தமிழ்நாடு

நடைபயணமாக பீஹார் செல்ல முயற்சி: ஏழு இளைஞர்கள் தடுத்து நிறுத்தம்

Added : மே 14, 2020
Share
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் வழியாக, நடைபயணமாக பீஹாருக்கு செல்ல முயன்ற இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, முகாமில் தங்கவைத்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த வட மாநிலத்தவர்கள், நடைபயணமாகவும், லாரிகளிலும், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் சென்று கொண்டிருக்கின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் தங்கி, பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏழு பேர், சோழவந்தானில் இருந்து சைக்கிளில், உடைமைகளுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால், சைக்கிள்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, நடைபயணமாக வந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவ்வழியே விஜயவாடா வரை செல்லும் ஒரு லாரியில் உதவி கேட்டு ஏறி வந்தனர். நேற்று காலை, ப.வேலூர் காவிரிப்பாலம் அருகே உள்ள சோதனைச்சாவடியை கடக்க முற்படும்போது, லாரி டிரைவர் வாகன சோதனைக்கு பயந்து, சிறிது தொலைவு நடந்து வருமாறும், பின்னர் அவர்களை ஏற்றிச்செல்வதாகவும் கூறி லாரியில் இருந்து ஏழு இளைஞர்களையும் இறக்கி விட்டார். இந்நிலையில், நடந்து வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், அரசு உதவி பெறும் கல்லூரியில் அவர்கள் ஏழு பேரையும் தங்கவைத்து உணவு வழங்கி மருத்துவப்பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அவர்களை பீஹாருக்கு அனுப்பி வைக்க, இ-பாஸ் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ரயில் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை, டி.எஸ்.பி.,பழனிசாமி மற்றும் இன்ஸ்பெக்டர் மனோகரன் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X