பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி 'டிவி' மூலம் 'நீட்' பயிற்சி: மே 20 முதல் ஒளிபரப்பு துவக்கம்

Added : மே 14, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாடு முழுவதும், ஜூலை, 26ம் தேதி, 'நீட்' தேர்வு நடைபெறும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் கல்வி, 'டிவி' மூலம், அரசு பள்ளி பிளஸ் 2 ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், ஐந்து நாள்களுக்கு பாட வாரியான ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். தினசரி, இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பை கல்வி, 'டிவி' வாயிலாக பார்த்து மாணவர்கள் பயன்பெற முடியும். ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பது நேரடியாக படப்பதிவு செய்யப்படுகிறது. நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில், தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்.குமார், முதன்மை கல்வி அலுவலர் பெரியண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று படப்பதிவு துவங்கப்பட்டது. இது, ஐந்து நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து, தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன்.குமார் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்காக ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்கள் பயிற்றுவிப்பதை, படப்பதிவு செய்து கல்வி 'டிவி'யில் ஒளிபரப்பு செய்வோம். தற்போது, கொரோனா தொற்றால் ஆசிரியர்கள் வர முடியாத நிலையில், அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று முதன்மை கல்வி அலுவலகத்திலேயே படப்பிடிப்பை நடத்துகிறோம். மே, 20 முதல், ஜூலை, 20 வரை, 'நீட்' பயிற்சி வகுப்பு, கல்வி, 'டிவி'யில் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X