திறந்தவெளி கிணறு: பொதுமக்கள் அச்சம்

Added : மே 14, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: தொட்டியப்பட்டியில், திறந்தவெளி கிணற்றால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். மல்லசமுத்திரம் அருகே, தொட்டியப்பட்டி அருந்ததியர் தெருவில், 25 வருடங்களுக்கு முன், தனியாருக்கு சொந்தமாக கிணறு அமைக்கப்பட்டது. அதற்கு, தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. நாளுக்குநாள் கிணற்றின் அருகே குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் தவறி கிணற்றுக்குள் விழ வாய்ப்புள்ளது. மேலும், ஆடு, கோழி போன்ற கால்நடைகள் அடிக்கடி கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிடுவதால், துர்நாற்றம் தாங்கமுடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, பகுதி மக்கள் அதிகாரிகளிடத்தில் பலமுறை புகாரளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, கிணற்றை மூடவோ, தடுப்புச்சுவர் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X