பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைவு எதிரொலி: கறிவேப்பிலை விலை உயர்வு

Added : மே 14, 2020
Share
Advertisement

கரூர்: வரத்து குறைவால் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை விலை உயர்ந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்வு காரணமாக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம், திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில், காய்கறிகள் கரூருக்கு லாரிகள், வேன்கள் மூலம் வர துவங்கியுள்ளன. இதனால் கடந்த மாதம், கிலோ, 30 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், 20 ரூபாய், 40 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய், 25 ரூபாய், 60 ரூபாய்க்கு விற்ற கேரட், 35 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி, 10 ரூபாய் என, விலை குறைந்துள்ளது. அதேபோல், பல்வேறு விதமான, காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. பொதுமக்கள் காய்கள் வாங்கும்போது, இலவசமாக வழங்கப்படும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையின், விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, கரூர் காய்கறி விற்பனையாளர்கள் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மாதம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சாகுபடி தோட்டங்களில், விவசாய கூலி ஆட்கள் வராததால், களை எடுத்தல், பறித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கவில்லை. இதனால், உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது, விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல, வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டாலும், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், 50 ரூபாய்க்கு விற்ற கொத்தமல்லி, 80 ரூபாய், 40 ரூபாய்க்கு விற்ற கறிவேப்பிலை, 60 ரூபாய் என, உயர்ந்துள்ளது. தற்போது, விவசாய கூலி ஆட்கள் பணிக்கு வர துவங்கிய நிலையில், மழையும் பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் வாரங்களில் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X