ஜவுளி தொழிலாளர்களுக்கு ஊதியம்: இந்திய தொழில் சங்கம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி தொழிலாளர்களுக்கு ஊதியம்: இந்திய தொழில் சங்கம் மனு

Added : மே 14, 2020
Share

கரூர்: இந்திய தொழில் சங்க மைய கவுன்சில் சார்பில், ஜவுளி நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவுப்படி, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியமர்த்துகின்றன. இதை காரணம் காட்டி ஊதியத்தை தர மறுத்து வருகின்றனர். இக்கட்டான நேரத்தில் பணம் இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, தொழிலாளர் நல ஆணையர் தலையிட்டு, வங்கி கணக்கில் ஊதியத்தை வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X