கரூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் மேலும் 2 பேருக்கு 'கொரோனா'

Added : மே 14, 2020
Share
கரூர்: கரூரில், மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் குணமடைந்து படிப்படியாக, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தொடர்ந்து, சென்னை மற்றும் மஹாராஷ்டிரா திரும்பிய, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரூர்: கரூரில், மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் குணமடைந்து படிப்படியாக, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தொடர்ந்து, சென்னை மற்றும் மஹாராஷ்டிரா திரும்பிய, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று, மஹாராஷ்டிரா சென்று திரும்பிய பள்ளப்பட்டியை சேர்ந்த, 60 வயது முதியவர், குஜராத்திலிருந்து திரும்பிய, கடவூர் அருகில் தேவர்மலையை சேர்ந்த, 45 வயது ஆண் என, இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்ட, 12 பேருக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X