சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நலவாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

Added : மே 14, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை, அமைப்பு சாரா தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். கரூர் அடுத்த வெண்ணைமலையில், தொழிலாளர் நலவாரிய அலுவலகம் உள்ளது. அதில், 60 வயதை கடந்த, 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, 50க்கும் மேற்பட்டவர்கள், 'கடந்த, ஒன்பது மாதங்களாக ஓய்வூதியமும், கொரோனா நிவாரண தொகையும், வழங்கப்படவில்லை' எனக்கூறி, நலவாரிய அலுவலகத்தை

கரூர்: கரூர் அருகே, தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை, அமைப்பு சாரா தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். கரூர் அடுத்த வெண்ணைமலையில், தொழிலாளர் நலவாரிய அலுவலகம் உள்ளது. அதில், 60 வயதை கடந்த, 300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை, 50க்கும் மேற்பட்டவர்கள், 'கடந்த, ஒன்பது மாதங்களாக ஓய்வூதியமும், கொரோனா நிவாரண தொகையும், வழங்கப்படவில்லை' எனக்கூறி, நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட் டனர். பணியில் இருந்த அலுவலக கண்காணிப்பாளர் முருகேசன், 'அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன், அவரவர் வங்கி கணக்கில் ஓய்வூதியம், நிவாரண தொகை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இதையடுத்து, நலவாரிய தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X