வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்துக்கு படிக்கட்டுகள் அமைக்க எதிர்பார்ப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, வெங்கமேட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழே, படிக்கட்டுகள் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் வழியாக, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் முன், சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து வாகனங்கள் வெங்கமேடு வழியாக கரூர் நகருக்கு செல்லும். அப்போது, வெங்கமேடு பகுதியில் ரயில்வே கேட் போடப்படும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், வெங்கமேட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கரூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த, 2006 டிசம்பரில், வெங்கமேட்டில் கட்டப்பட்ட, புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், ரயில்வே பாதையை பொதுமக்கள் கடந்து செல்வதை தடுக்கும் வகையில், கீழ்பகுதியிலிருந்து மேம்பாலத்துக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை. இதனால், வெங்கமேடு மற்றும் கரூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஆபத்தான நிலையில் ரயில்வே இருப்பு பாதையை கடந்து செல்கின்றனர். அப்போது, ரயிலில் சிலர் எதிர்பாராதவிதமாக அடிபட்டு இறக்கின்றனர். எனவே, ரயில்வே மேம்பாலத்துக்கு படிக்கட்டுகள் அமைக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, கரூர் ரயில்வே துறை அலுவலர்கள் கூறுகையில், 'இரண்டு ஆண்டுகளுக்கு முன், வெங்கமேடு ரயில்வே பாலத்துக்கு படிக்கட்டுகள் அமைக்க, பரிந்துரை அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்த பிறகு, பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X