குழாய் பராமரிப்பு நடந்த இடத்தில் சாலை அமைக்க வலியுறுத்தல்

Added : மே 14, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில் குழாய் சீரமைக்கப்பட்ட இடத்தில், சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் நகராட்சி பகுதிகளில், அடிக்கடி குடிநீர் குழாய்கள் உடைவதும், அதை நகராட்சி நிர்வாகம் சீரமைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி சாலை லைட் ஹவுஸ் கார்னர் அருகே, குடிநீர் குழாய் உடைந்தது. அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, உடைந்த குழாயை நகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர். ஆனால், அந்த இடத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், குழாய் பராமரிப்பு செய்யப்பட்ட இடத்தில், சாலை அமைக்காததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த இடத்தில், சாலை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X