நாடுகடத்தல் வழக்கில் மல்லையாவுக்கு பின்னடைவு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த அமலாக்க துறை முயற்சி செய்வதற்கு எதிரான மனுவை லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ‛வங்கிகளில் நான் பெற்ற 100 சதவீதக் கடன்களையும் செலுத்தி விடுகிறேன், எனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய
Vijay Mallya, central government, govt of India, money laundering charges, Kingfisher Airlines, Covid 19 relief package, coronavirus, corona, covid-19, corona outbreak, india, UK, loan repayment offer, விஜய்மல்லையா, கடன், வழக்கு, கோரிக்கை, மத்தியஅரசு

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த அமலாக்க துறை முயற்சி செய்வதற்கு எதிரான மனுவை லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.‛வங்கிகளில் நான் பெற்ற 100 சதவீதக் கடன்களையும் செலுத்தி விடுகிறேன், எனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கப் பிரிவினர், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான பணிகள் லண்டன் உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


latest tamil newsஇந்த திட்டங்களை பாராட்டிய விஜய் மல்லையா, மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்ததற்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.
நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன், நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
14-மே-202020:26:53 IST Report Abuse
Rpalnivelu 'ஊரையே அடித்து உலையில் போட்ட குடும்ப நிதிகள் வாழும் நாட்டில பிறந்ததுக்கு வெட்கப்படறேன், வேதனைப்படறேன்" லட்சம் கோடிகளில் கொள்ளையடித்த "விஞ்ஞானி" வாழ்ந்த நாடிது. இங்குபோய் ஒன்பதாயிரம் கோடியை அடித்துவிட்டு ஊரைவிட்டு ஓடினாயே, முட்டாள்.
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவை., தூத்துக்குடி மாவட்டம்,இந்தியா
14-மே-202018:37:16 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா Let dubakoor dumeelans explain this
Rate this:
Cancel
14-மே-202018:35:53 IST Report Abuse
தமிழ் இனிமேல் இந்தமாதிரி செய்தியெல்லாம் நிறைய எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X